கொடில போட்ருக்க துணிய முகந்து பாக்குது, யாரும் வெளிய வராதீங்க , அதிர்ந்து போன கல்லூரி மாணவர்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பத்தூர்: கோவைப்புதூரில் தனியார் கல்லூரிக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீப நாட்களாகவே வன விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது அதிகமாகி வருகிறது. அதிலும் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் ஊருக்குள் புகுந்து நடமாடி வருகிறது. காலநிலை மாறுவதும். வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் மனிதர்களால் சூறையாடப்படுவதால் ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைகிறது.
கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி
கோயம்பத்தூரை அடுத்த கோவைப்புதூர் காட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி வருகிறது. இதனை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்று கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், அந்த கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சிக்காமல் வனத்துறை அதிகாரிகளுக்கு டிமிக்கி காட்டி வருகிறது.
நாய்களை கடித்து கொன்றது:
இந்நிலையில் அண்மையில் அந்த சிறுத்தைப்புலி, அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்துள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பிற்காக வளர்த்து வந்த இரு நாய்களை கடித்து கொன்றுள்ளது. இது தவிர தரையில் ரத்தக்கறையுடன் சிறுத்தைப்புலியின் கால் தடங்கள் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், அந்த கல்லூரியை சுற்றி சிறுத்தைப்புலி செல்வது, அங்குள்ள படிக்கட்டுகளில் ராஜா போல் மெதுவாக இறங்கி வருவதும் வாடிக்கை. அதோடு, காயப்போடப்பட்டு இருந்த துணிகளை முகர்ந்து பார்ப்பது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்கள் வெளியே வரக்கூடாது:
இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவைப்புதூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க ஏற்கனவே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அது கல்லூரிக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்றது நிஜம் தானா என ஆய்வு நடந்து வருகிறது.
சிறுத்தைப்புலியின் நடமாட்டம் உள்ளதால், அது கூண்டில் சிக்கும் வரை பொதுமக்கள் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். கண்டிப்பாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மற்ற செய்திகள்