போன் பண்ணா 'சுவிட்ச்' ஆஃப்னு வருது... 277 கொரோனா நோயாளிகளை 'காணோம்'... போலீஸ்க்கு போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்277 கொரோனா நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் 277 கொரோனா நோயாளிகளை காணவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை கொரோனா அறிகுறி அல்லது பாசிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் வாங்கிக்கொண்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். அதன்பின் ரிசல்ட் வந்தவுடன் பாசிட்டிவ் நபர்களுக்கு போன் செய்து மருத்துவனையில் சிகிச்சைக்கு வருமாறு அழைப்பார்கள். வீட்டின் முன்பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்ற நோட்டீஸ் ஒட்டப்படும்.
ஆனால் கடந்த மே மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதி வரை கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்த 277 பேரை காணவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும், போலியான முகவரியை கொடுத்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து போலீஸ் உதவியை மாநகராட்சி அதிகாரிகள் நாடியுள்ளனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சென்னை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்