"1 மணிநேரம் முன்பு போன் பண்ணான்.. நான் எடுக்கல".. இளம் உதவி இயக்குனர் திடீர் மரணம்.. வேதனையில் ஷாந்தனு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளம் உதவி இயக்குனர் மறைவு குறித்து பிரபல நடிகர் ஷாந்தனு பகிர்ந்துள்ள ட்வீட், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | ICC : கேப்டன் பட்லர்.. அணியில் மாஸ் காட்டும் முக்கிய இந்திய வீரர்கள்.. பரபர லிஸ்ட்..!!
சக்கரக்கட்டி, மாஸ்டர், முப்பரிமாணம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஷாந்தனு பாக்யராஜ். இளம் உதவி இயக்குனர் ஒருவரின் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், ராமகிருஷ்ணா என்ற இளைஞரின் புகைப்படத்தை பகிர்ந்து, "ஒரு சிறந்த நண்பனை நேற்று இரவு இழந்து விட்டேன். ஒரு ஆர்வமுள்ள, மிகவும் திறமையான இளம் இயக்குனர். 26 வயது தான் ஆகிறது. தீய பழக்கங்கள் எதுவும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆனால், கடவுள் அவரை சீக்கிரம் அழைத்து சென்றார். அவர் வேலையில் இருக்கும் போது திடீரென சரிந்து உயிரிழந்தார்.
வாழ்க்கை என்பது நிச்சயமற்றது. வாழ்க்கை என்பது நியாயமற்றது. தன்னை காப்பாற்றி கொள்ள ஒரு கால அவகாசம் கூட அவருக்கு வழங்கப்படவில்லை. கீழே சரிந்து சில நிமிடங்களில் இறந்து விட்டார். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னர் தான் என்னை அழைத்திருந்தார். ஆனால், நான் அந்த அழைப்பை எடுக்கவில்லை. இப்போது அந்த அழைப்பை எடுத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை என்பதால், ஈகோ, வெறுப்பு என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் மறந்து விடுவோம். முடிந்த வரைக்கும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களிடம் வெறுப்பை காண்பிப்பதற்கு பதிலாக அவர்களிடம் புன்னகைப்போம். மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம் - இன்றைய உலகில் மிகப்பெரிய குற்றவாளி அது.
Lost a dear friend last night
An aspiring, EXTREMELY TALENTED ASSISTANT DIRECTOR - 26yr old… Absolutely no bad habits, healthy lifestyle..but god took him away too early…
He jus “Collapsed”… dropped dead during work.. #Ramakrishna
1/4 pic.twitter.com/dXjxcAvGkE
— ஷாந்தனு (@imKBRshanthnu) January 24, 2023
நீங்கள் அப்படி ஏதாவது ஒரு வழிகளில் செல்கிறீர்கள் என்றால், யாரிடமாவது பேசுங்கள். அந்த வலியையும், மன அழுத்தத்தையும் தனியாக எடுத்து செல்லாதீர்கள். அது உங்களை தின்று விடும். "என்ன சார் இருக்கு இந்த உலகத்திலே.. அவ்ளோ நெகட்டிவிட்டி, வெறுப்பு.. சந்தோசமா இருப்போம். அன்பை பகிர்வோம்.. அதுக்கு எந்த செலவும் ஆகப் போறதில்ல" - இதைத்தான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வார் " என வேதனையுடன் ஷாந்தனு குறிப்பிட்டுள்ளார்.
26 வயதே ஆகும் உதவி இயக்குனர் மறைவு பற்றி ஷாந்தனு பகிர்ந்துள்ள ட்வீட், பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.
Also Read | காலிங் பெல் வேலை செய்யல.. போனையும் எடுக்கல... வீட்டின் பின்புறம் சடலமாக கிடந்த இளைஞர்..!
மற்ற செய்திகள்