'வாக்கிங் போய் டயர்டா இருக்கு...' 'கொஞ்ச நேரம் குளக்கரையில ரெஸ்ட் எடுப்போம்...' - அப்படியே குளத்த திரும்பி பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை பேரூர் பகுதியில் உள்ள புட்டுவிக்கி பெரிய குளத்தின் அருகே சிலர் காலை நடைப்பயிற்சி செய்தனர். அப்போது , ஓய்வு எடுப்பதற்காக குளத்தின் அருகே அமர்ந்துள்ளனர். குளத்தில் பார்த்த போது தண்ணீருக்குள் சாமி சிலைகள் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக பேரூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
உடனே விரைந்து வந்த போலீசார், குளத்தில் சிலைகள் கிடப்பதை உறுதி செய்தனர். போலீசார் வருவாய்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். பின்னர், குளத்தில் இருந்த விஷ்ணு, துர்க்கை, மகாலட்சுமி, அம்மன், கிருஷ்ணர், விநாயகர் சரஸ்வதி உள்ளிட்ட சாமி சிலைகளை மீட்டனர்.
மொத்தம் மீட்கப்பட்ட ஏழு சிலைகள் உலோகத்திலும் ஒன்று கற்சிலை ஆகும். தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகு குளத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் பழமையான சிலைகளா? எவ்வளவு ஆண்டுகள் பழமையானவை? எந்த கோவிலுக்கு சொந்தமானவை? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பின்னால் ஏதேனும் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்