My India Party

Video : "கண்டிப்பா இது 'தற்கொலை'யா இருக்காது..." எனக்கு நெறய 'சந்தேகம்' இருக்கு... 'சின்னத்திரை' நடிகை பரபரப்பு 'பேட்டி'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது, பல சின்னத்திரை பிரபலங்களையும் கடும் அதிர்ச்சியிலும், மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

Video : "கண்டிப்பா இது 'தற்கொலை'யா இருக்காது..." எனக்கு நெறய 'சந்தேகம்' இருக்கு... 'சின்னத்திரை' நடிகை பரபரப்பு 'பேட்டி'!!!

இந்நிலையில், நடிகை சித்ராவின் தோழியும், சின்னத்திரை நடிகையுமான ரஞ்சனா, Behindwoods சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பேசிய ரஞ்சனா, 'இன்று காலை சித்ராவின் இழப்பு தொடர்பான செய்தி அறிந்ததும் மிகவும் வேதனைப்பட்டேன். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால், கண்டிப்பாக இது தற்கொலையாக இருக்காது.

நள்ளிரவு ஷூட்டிங் முடித்து விட்டு திரும்பியுள்ள சித்ரா, தான் கல்யாணம் செய்யப் போகும் ஆணுடன் சேர்ந்து கொண்டு ஹோட்டலில் தங்கியுள்ளார். இரவு நேரத்தில் அவர் உடை மாற்ற வேண்டும் எனக் கூறி தனது வருங்கால கணவரை வெளியே போக சொன்னதாக சொல்லி தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். வருங்கால கணவரை வெளியே போக சொல்லி சித்ரா ஏன் உடை மாற்றப் போகிறேன் என சொல்ல வேண்டும். கண்டிப்பாக அப்படி நடந்திருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.

அதே போல, இரவு நேரத்தில் தாமதமாக வந்த சித்ரா, எப்படி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்வார்?. 10 நிமிடம் நம்முடன் சித்ரா பேசினால் கூட, நம்மை சுற்றியுள்ள கஷ்டங்களை நாம் மறந்து விடுவோம். அப்படிப்பட்ட பெண் எப்படி தற்கொலை செய்து கொள்வார்?. சித்ராவின் மரணத்தை சுற்றியுள்ள நிறைய சந்தேகங்கள் உள்ளது' என ரஞ்சனா அடுக்கடுக்காக பல சந்தேகங்களை முன் வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

முழு வீடியோவைக் காண:

மற்ற செய்திகள்