“மனைவி சொந்தப் படம் எடுக்கனும்!”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி நேற்றுமுன்தினம் காலை தனது மனைவி மற்றும் மகனுடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான முல்லை அரும்பு தோட்டத்திற்கு சென்றுவிட்டு குடும்பத்துடன் மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது அவரது வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ந்துள்ளார்.

“மனைவி சொந்தப் படம் எடுக்கனும்!”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை!

வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த மரம் மற்றும் இரும்பிலான அலமாரிகள்  உடைக்கப்பட்டதுடன், அலமாரிகளில் வைத்திருந்த 18 பவுன் நகைகள்,  300 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ 50 ஆயிரம் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தன. இதுபற்றி பண்ரூட்டி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தேசிங்குவின் மகன் மணிகண்டன் சொந்த வீட்டிலேயே திருடியது தெரியவர, செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி பேசிய மணிகண்டன், சின்னத்திரையில் நடித்து வரும் தனது மனைவி சொந்தமாக படம் இயக்குவதற்காக, விநாயகர் சதூர்த்தி அன்று இருவரும் திட்டம் தீட்டியதாகவும், அதன்படி தனது அப்பா வீட்டில் திருட முடிவெடுத்து, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர் நகை பொருட்கள் திருடு போன மாதிரி நாடகமாடியதாகவும், தற்போது போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டதால் திருடிய பொருட்களை வாங்க வந்த தனது மனைவி அந்த சின்னத்திரை நடிகையான பரமேஸ்வரி எனும் சுசித்ரா தலைமறைவாகி விட்டதாகக் கூறியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்