#VIDEO: ‘இப்படி எத்தன பேர இவர் ஊருக்குள்ள விட்ருப்பாரோ?’.. ‘கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய அதிகாரி!’.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கர்நாடகாவின் டுமக்குரு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் சுகாதார உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை முறையாக பரிசோதிக்காமல், அலட்சியமாக நாற்காலியில் அமர்ந்து போன் பேசிக்கொண்டே, பயணிகளின் முகத்தை பார்க்க கூட செய்யாமல் வெறுமனே இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் சோதனை கருவியை பயணிகளின் திசையில் மட்டுமே காண்பித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பலரும், கொடிய நோயான கொரோனாவை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், பயணிகளை பரிசோதிப்பது போல் பாவனை செய்துகொண்டு இவ்வளவு அலட்சியமாக இருந்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகக் கூறி கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இதுபற்றி விசாரித்த தகவல் மற்றும் பொதுத்துறை செயலாளர் மணிவண்ணன், மாவட்ட சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டதன் பேரில், டுமக்குரு மாவட்ட சுகாதார ஆய்வாளர், அலட்சியமாக நடந்துகொண்ட சுகாதார உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, பெங்களூரு மண்டல மேலாளர் அசோக் குமார் வெர்மா, ‘சஸ்பெண்டு செய்யப்பட்ட சுகாதாரா உதவி ஆய்வாளர் மத்திய அரசின் கீழ் ரயில்வே துறையில் பணிபுரிபவர் அல்ல’ என்றும் ‘அவர் மாநில அரசால் அவசர கால சுகாதார நடவடிக்கைக்காக ரயில்வே நிலைய பரிசோதனை பணியில் அமர்த்தப்பட்டவர்’ என்றும் குறிப்பிட்டதோடு,
Who's this official screening passengers in Tumkur Railway Station @Karnataka_DIPR? He's not even reading the temperature and seems to be completely busy on phone. @PiyushGoyal @MoHFW_INDIA @SureshAngadi_j
Video 👇👇👇 pic.twitter.com/al0bpBJb8r
— Chiru Bhat | ಚಿರು ಭಟ್ (@mechirubhat) March 20, 2020
இதனை மாநில அரசு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.