2 மாசம் கடுமையான வயிற்று வலி.. இளைஞரை ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. ஆத்தாடி இவ்வளவா..?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு அருகே கடுமையான வயிற்று வலி காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இளைஞரை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கியுள்ளனர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்.

2 மாசம் கடுமையான வயிற்று வலி.. இளைஞரை ஸ்கேன் செஞ்சு பார்த்துட்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்.. ஆத்தாடி இவ்வளவா..?!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | மனசே குளிர்ந்து போச்சுப்பா.. 100-வது டெஸ்ட்டில் புஜாரா.. இந்திய அணி கொடுத்த கவுரவம்.. வீடியோ..!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கர். 24 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மதுப் பழக்கத்தில் இருந்து மீள அங்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறார் சங்கர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் இவர் வீடு திரும்பியுள்ளார். இதனிடைய கடந்த இரண்டு மாத காலமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சங்கர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனாலும் வலி குறையவில்லை.

Sengalpattu Hospital doctors removed tooth brush from Youth abdomen

Images are subject to © copyright to their respective owners.

இதனை அடுத்து கடந்த மாதம் 30 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்கர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டுள்ளது. அந்த ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் சற்று  அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். சங்கரின் வயிற்றில் பல் துலக்கும் டூத் பிரஷ், பிளாஸ்டிக் குச்சி, சில கிழிந்த துணிகள், பேண்ட் ஜிப் போன்ற பல பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Sengalpattu Hospital doctors removed tooth brush from Youth abdomen

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி சங்கருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு இருக்கிறது. அப்போது அவருடைய வயிற்றில் சிக்கி இருந்த பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சங்கர் இந்த பொருட்களை விழுங்கியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | ஃப்ரிட்ஜில் இளம்பெண் சடலம்.. சந்தேகம் வரக்கூடாதுன்னு லிவிங் டுகெதர் பார்ட்னர் செஞ்ச காரியம்.. பதற்றத்தில் டெல்லி..!

SENGALPATTU, SENGALPATTU HOSPITAL, SENGALPATTU HOSPITAL DOCTORS, TOOTH BRUSH, YOUTH ABDOMEN

மற்ற செய்திகள்