'மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்ட பிளான்'... அதிருப்தியில் அதிமுக நிர்வாகிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாநகர அதிமுகவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் செல்லூர் கே.ராஜூ. பொதுக்கூட்டங்களில் இவரின் ஆவேசமான பேச்சும், அதன் நடுவே இவரது கலகலப்பான மதுரை தமிழும், அதோடு சேர்ந்து வரும் எம்ஜிஆர் பாடல்களையும் ஜெயலலிதா ரசித்துக்கேட்பார்.
இதனிடையே வைகை அணையில் நீர் ஆவியாதலைத் தடுக்க தெர்மோகோல்களை மிதக்க விட்டது, மதுரையை ‘சிட்னி’யாக்குவேன், ‘வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள் டெங்கு கொசு வரவே வராது’, என இவரின் செயல்பாடுகள் செல்லூர் ராஜூவை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இவர் மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். தான் அமைச்சராவதற்கும், எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும் மதுரை மேற்கு தொகுதியை தனக்கு ராசியான தொகுதியாக செல்லூர் கே.ராஜூ கருதி வந்தார்.
ஆனால் இந்த முறை தொகுதி நிலவரம் அவருக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த அவர், தொகுதி மாறி போட்டியிடலாம் என்று தனது மாநகர மாவட்டத்திற்குட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இதில், கடந்த முறை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அந்தத் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்பியுமான கோபாலகிருஷ்ணன், எம்எஸ்.பாண்டியன் உள்ளிட்டோர் கேட்கின்றனர். இதனிடையே இந்த மூன்று தொகுதிகளிலும் தான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதால், இந்தத் தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த அவரது ஆதரவாளர்கள், மாநகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்