‘ஒரு கிட்னி 3 கோடி ரூபாய்..’ இப்படி எல்லாம் கூடவா ஏமாத்துவாங்க..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் பெயரில் சமூக வலைத்தளங்களில் கிட்னி தேவை என விளம்பரப்படுத்தி ஒரு கும்பல் பலரிடம் பணத்தைக் கறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு கிட்னி 3 கோடி ரூபாய்..’ இப்படி எல்லாம் கூடவா ஏமாத்துவாங்க..?

ஈரோடு சம்பத் நகரில் இயங்கிவரும் கல்யாணி கிட்னி சென்டர் என்ற மருத்துவமனையின் பெயரில் மோசடி கும்பல் ஒன்று ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அதில் அவர்கள் “கிட்னி தேவை. ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் கொடுக்கப்படும்” என விளம்பரப்படுத்தியுள்ளனர். அதைப் பார்த்துப் பலரும் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்கு அவர்கள், “7500 ரூபாய் பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் சீனியாரிட்டி அடிப்படையில் கிட்னியைக் கொடுக்க முடியும்” என ஒரு அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்து, பலரிடமும் பணத்தைக் கறந்துள்ளனர். பின்னர் எந்தத் தகவலும் இல்லாததால் பணம் கொடுத்தவர்கள் நேரடியாக மருத்துவமனையைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போதுதான் அந்த கும்பல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பல் வட மாநிலங்களில் இருந்து செயல்பட்டிருக்கலாம் எனவும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

KIDNEY, FAKEACCOUNT