'போர் உக்ரமா நடக்குது'...'நான் கறி வேண்டாம்னு சொன்னேன்'... 'பிரபாகரன் குறித்து சீமானின் வைரல் பேச்சு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்து கொண்டிருந்தபோது விருந்தினராக சென்ற தம்மை பிரபாகரன் எப்படி கவனித்தார் என சீமான் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

'போர் உக்ரமா நடக்குது'...'நான் கறி வேண்டாம்னு சொன்னேன்'... 'பிரபாகரன் குறித்து சீமானின் வைரல் பேச்சு'!

சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பிரபாகரன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் தனக்கும் பிரபாகரனுக்குமான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பிரபாகரனின் தளபதிகளில் ஒருவரான பொட்டு அம்மான் வீட்டில் சாப்பிட்ட அனுபவத்தையும் அங்கிருந்த நாம் தமிழர் கட்சி தம்பிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''தான் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது பின்னால் இருந்த ஒருவர் அதை குறித்து கொண்டிருந்தார். அப்போது ஏன் அவர் அவ்வாறு குறிப்பெடுத்து கொண்டிருக்கிறார் என முதலில் தனக்கு புரியவில்லை என சீமான் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இதுகுறித்து அந்த நபரிடம் கேட்ட போது நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள், எந்த உணவை தவிர்த்து விடுகிறீர்கள் என்பதை குறித்து கொண்டு அதனை பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டாம் என அந்த நபர் தெரிவித்தாக சீமான் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வராக வேண்டும் என்பதற்காக எல்லாம் கட்சி தொடங்கவில்லை என்றும் இப்படி பேசுவதற்காகவே கட்சி தொடங்கியதாகவும் தெரிவித்தார். இதனிடையே அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SEEMAN, NAAMTAMILARKATCHI, TWITTER, PRABHAKARAN, LTTE