அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தங்கள் ஆட்சியில் பெட்ரோலின் விலையை குறைக்க புதுவித திட்டத்தை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் உறுதியளித்து வருகின்றன.

இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு தாங்கள் ஆட்சியில் ஒரு விடிவு வரும் எனவும் அதற்கான முறைகளையும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சீமான், 'பிரேசிலில் கரும்பில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுவது போல், எங்கள் ஆட்சியில் தமிழகத்திலும் கரும்பிலிருந்து பெட்ரோல் தயாரிக்கப்பட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பெட்ரோல் விலை குறித்த கவலை நீக்குவோம்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'நாம் தமிழர் கட்சி ஆட்சியின் போது, கலைப்பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும், தொழில் வளர்ச்சிக்கான தலைநகராக கோவை - திருப்பூர் அமைக்கப்படும்' என்றும் சீமான் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்