இதுவரை வெளிவராத ‘ராஜராஜ சோழன்’ முழு வண்ண ஓவியம்.. ‘முதல்முறையாக’ வெளியிட்ட சீமான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இதுவரை வெளிவராத ராஜராஜ சோழனின் முழுவண்ண ஓவியத்தை முதல்முறையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலின் மூலம் தமிழர்களின் கட்டட கலைக்கு பெருமை சேர்த்த பேரரசன் ராஜராஜ சோழன் பிறந்த தினமும், அரியணை ஏறிய தினமுமான ஐப்பசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் சதய விழா, கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஒருநாள் மட்டும் நடைபெற்றது. சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா இன்று நடைபெற்றது. மேலும் அரசு சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்க கூடிய நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்தநிலையில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ராஜராஜ சோழனின் முழுவண்ண ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சாந்தாராம் அறையில் முழு வண்ண ஓவியமாக உள்ள பேரரசரின் ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பெருமிதத்துடன் வெளியிடுகின்றது. pic.twitter.com/tq7VeertVU
— சீமான் (@SeemanOfficial) October 26, 2020
மற்ற செய்திகள்