“தமிழகத்தில் 2-வது நபருக்கு”... “கொரோனா வைரஸ் தொற்று உறுதி”... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வ தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ரயிலில் வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த இளைஞர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Coronaupdate: #RGGH, Chennai reports the 2nd positive case for #Covid19. The Pt hails from Delhi, is in isolation & stable is under the observation of the expert team treating #Covid19. #TNHealth @MoHFW_INDIA #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 18, 2020
அந்த நபருடன் பயண்ம் செய்தவர்கள் யார், உறவினர்கள் என அனைவரையும் பரிசோதித்து கண்காணிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சில நாட்களில் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.