‘விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை’!.. அதிமுக கூட்டணி கட்சிகள் சொன்னது என்ன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தின.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்ய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நேற்று இரவு பாஜக முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன், ‘2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டியது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகியுள்ளன. இன்று தொகுதிப்பட்டியல் வெளியிடப்படும்’ என தெரிவித்தார்.
இதனை அடுத்து பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, ‘அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தொகுதி பட்டியல் இன்று வெளியாகும்’ என தெரிவித்தார்.
இதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். இரவு 9.20 மணியளவில் தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை விடிய விடிய நடைபெற்றது.
மற்ற செய்திகள்