ராமேசுவரம் அருகே பாம்பன் கடற்பகுதியில் கடல்நீர் நிறம் மாறி காட்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதி மிகுந்த கொந்தளிப்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறம் மாறி காட்சி அளிக்கிறது. பாம்பன் ரெயில் பாலம் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் வரையிலான வடக்கு கடல் பகுதி நிறம் மாறி காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்