மண்டை பத்திரம்.. 8 KG எடைகொண்ட‌ 'கருங்கல்' ஹெல்மெட்.. முரட்டு ஐடியாவே இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அவிநாசியில் கருங்கல்லில் ஹெல்மெட்டை வடிவமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சிற்பி ஒருவர்.

மண்டை பத்திரம்.. 8 KG எடைகொண்ட‌ 'கருங்கல்' ஹெல்மெட்.. முரட்டு ஐடியாவே இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

Also Read | மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்தியாவில் போக்குவரத்தின் தேவை எப்போதுமே மிக அதிகம். மக்களின் தேவைகளுக்காக பொது போக்குவரத்து சேவைகளை அரசுகள் மேம்படுத்தி வருகின்றன. இதனிடையே பொதுமக்களிடையே தனியாக வாகனங்கள் வாங்கும் ஆர்வமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Sculptor who made 8 kg helmet in stone video

முக்கியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயணத்தின் போது ஹெல்மெட் அணியும்படி தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் உயிர்சேதம் ஏற்படுவதை கருத்தில்கொண்டு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாகியுள்ளது தமிழக அரசு. இதனிடையே மக்களிடம் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவிநாசியை சேர்ந்த ஒருவர் கருங்கல்லில் ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன். 32 வயதான இவர் ஒரே கருங்கல்லில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்திருக்கிறார். 8 கிலோ எடை கொண்ட இந்த கருங்கல் ஹெல்மெட்டை உருவாக்க 3 மாத காலம் தேவைப்பட்டதாக கூறுகிறார் சரவணன். கோவிட் காலத்தில் கொரோனா கிருமி, முகக்கவசம், சானிடைசர் பாட்டில் ஆகியவற்றையும் சிற்பமாக செதுக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இவர்.

Sculptor who made 8 kg helmet in stone video

இந்நிலையில், மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கருங்கல் ஹெல்மெட்டை செதுக்கியதாக கூறுகிறார் சரவணன். இதுபற்றி அவர் பேசுகையில்,"இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று அதற்க்கு அபராதமும் செலுத்துகின்றனர். அதுமட்டும் அல்லாமல் விபத்து ஏற்பட்டால் விலைமதிப்பில்லாத உயிரையும் இழக்க நேரிடுகிறது. ஆகவே, மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த கருங்கல் ஹெல்மெட்டை வடிவமைத்தேன்" என்றார்.

Also Read | இது புதுசா இருக்குண்ணே.. கல்யாண மண்டபம் கொடுத்த விநோத ஆஃபர்.. ஆச்சர்யப்பட்டுப்போன மக்கள்..!

HELMET, SCULPTOR, HELMET IN STONE, 8 KG HELMET IN STONE

மற்ற செய்திகள்