தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை… 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் நேற்று இரவு முழுவதும் விடாது கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னையில் எல்லாம் இரவு ஆரம்பித்த மழை இடைவிடாது காலையில் வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் கடலோரப் பகுதிகளுக்கு வரும் 27 ஆம்தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அடுத்த வாரமும் தமிழகத்தில் மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்