'அவங்களுக்கு மட்டும் தான் லீவு' ... 'நீங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துருங்க' ... பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த முதன்மை 'கல்வி அலுவலர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த பின்பும் உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றிற்கு விடுமுறையும், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை செயல்பட தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக அரசும் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளித்திருந்தது. இருந்த போதிலும் தமிழக அரசின் உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், உடனடியாக சம்மந்தப்பட்ட பள்ளிகளை எச்சரித்து உடனடியாக விடுமுறை அளித்து வைத்தனர்.