'கொழந்தைங்களையே தண்ணி கொண்டு வரசொல்லுங்க’.. பள்ளிகளின் முடிவால் ஸ்கூலுக்கு லேட் ஆகும் சூழ்நிலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் இருப்பது போல் அல்லாமல், சென்னையில் இம்முறை தண்ணீர் பிரச்சனை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

'கொழந்தைங்களையே தண்ணி கொண்டு வரசொல்லுங்க’.. பள்ளிகளின் முடிவால் ஸ்கூலுக்கு லேட் ஆகும் சூழ்நிலை!

இந்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், சென்னையில் சில பள்ளிகள் மாணவக் குழந்தைகளை வீட்டில் இருந்தே அவரவர்க்கான குடிதண்ணீரை எடுத்துக்கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ள சம்பவம் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்று,‘தண்ணீர் பற்றாக்குறையினால், உங்கள் குழந்தைக்கு வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள்’ என்று பெற்றோர்களின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது.

இதைப் பார்த்தவுடன் ஷாக் ஆகிப் போன பெற்றோர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியின்படி, இந்த வெயிலை சமாளிக்க, தங்கள் குழந்தை ஒரு நாளில் 2 வாட்டர் பாட்டிலாவது தண்ணீர் குடித்தாக வேண்டிய சூழலில், ஏற்கனவே வெயிட்டாக இருக்கும் அந்த ஸ்கூல் பையில் தண்ணீரையும் வைத்து அனுப்பினால், குழந்தை அவற்றை சுமப்பதற்கே கஷ்டப்படுவதாகக் கூறியுள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள மாணவர்-பெற்றோர் நலச் சங்கத்தைச் சேர்ந்த அருமைநாதன், ‘பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் உள்ள பள்ளிக் கழிவறைகளுக்கே தண்ணீர் கிடைக்காதபோது, சில அரசுப் பள்ளிகள் மாணவர்களிடம் தண்ணீரை வீட்டில் இருந்தே கொண்டுவரச் சொல்வதென்பது பல குடியிருப்புப் பகுதிகளில் கடினம்’ என்றும் ‘மற்ற மாநிலங்களில் இருப்பது போல், ‘பள்ளிகளை கோடைவிடுமுறைக்குப் பிறகு, சற்று தாமதமாக திறந்திருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

CHENNAI, SCHOOL, WATERSCARCITY