உங்க 'அப்பாவுக்கு' அடிபட்டுருச்சு... 6-ம் வகுப்பு மாணவியை... 'ஏமாற்றி' அழைத்துச்சென்ற வாலிபர்... எப்படி சிக்கினார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும் நன்கு தெரிந்தவர்களாலேயே சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளர் ஒருவரின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல சிறுமி பள்ளிக்கு சென்றுள்ளார்.
மாலை 3.30 மணியளவில் அவரின் பக்கத்து வீட்டைச்சேர்ந்த வினோத்குமார்(30) என்னும் வாலிபர் மாணவியின் பள்ளிக்கு சென்று, அவரின் தந்தைக்கு அடிபட்டு விட்டதாக தலைமை ஆசிரியரிடம் நாடகமாடி இருக்கிறார். இதை நம்பிய தலைமை ஆசிரியர் அந்த மாணவியை வினோத்குமாருடன் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் சிறுமியின் தந்தைக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது தந்தையின் செல்போன் எண்ணுக்கு தலைமை ஆசிரியர் போன் செய்துள்ளார். போனை எடுத்த சிறுமியின் தந்தையிடம் உடம்பு எப்படி இருக்கிறது? என்று தலைமை ஆசிரியர் கேட்க, அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை நான் நல்லாத்தான் இருக்கேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மாணவியை தேடி சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியில் உள்ள விவசாய நிலமொன்றில், மாணவியை மிரட்டி வினோத்குமார் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை பார்த்த கிராம மக்கள் அவரை அடித்து, உதைத்தனர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்குமார் மீது குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார், 'போக்ஸோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.