'தரையில் உருண்டு அழுது புரண்ட'.. தலைமை ஆசிரியை.. 'தொடக்கப் பள்ளியில் நேர்ந்த பரிதாபம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரசுப்பள்ளி தலை ஆசிரியர் ஒருவர் தன்னை பணியிட மாற்றம் செய்யக் கோரி அழுது புரண்டுள்ள சம்பவம் பரவி வருகிறது.

'தரையில் உருண்டு அழுது புரண்ட'.. தலைமை ஆசிரியை.. 'தொடக்கப் பள்ளியில் நேர்ந்த பரிதாபம்!'

சில மாதங்களுக்கு முன்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, ஓய்வூதியத் திட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது தலைமை ஆசிரியர் ஒருவர் சந்தித்துள்ள பிரச்சனை புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்திரா, இடமாறுதலுக்காக நிகழ்ந்த கவுன்சிலிங்கில், தான் பொறுப்பு வகிக்கும் பள்ளியில் 2 மாணவர்களே வருவதாகவும் அவர்களும் எப்போதாவதுதான் வருகிறார்கள் என்றும் கூறி கதறியுள்ளார்.

ஆனால் அவரது இடமாற்றக் கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அவ்விடத்திலெயே அழுது புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TEACHER, HEADMASTER, DINDUGAL, ELEMENTARYSCHOOL