BGM Shortfilms 2019

‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளிகளுக்கு ஜாதியை குறிக்கும் வகையில் கைகளில் கயிறு கட்டி வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!

தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜாதி வாரியாக கைகளில் கயிறு கட்டிக்கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, காவி நிறங்களில் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.

கடந்த 2018 -ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில், மாணவர்கள் கைகளில் கயிறு கட்டிவருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் தலைமை கல்வி அலுவலர், இதுபோன்று நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

STUDENTS, CASTEBANDS, SCHOOL, TAMILNADU