‘தாலி மாதிரியே செயினைக் கட்டிய மாணவன்’.. ‘வெட்கித் தலைகுனியும் மாணவி!’.. ‘வீடியோவால் பரபரப்பு!’.. ‘களத்தில் இறங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குழு!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி மாணவிக்கு செயின் அணிவிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருவதை அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘தாலி மாதிரியே செயினைக் கட்டிய மாணவன்’.. ‘வெட்கித் தலைகுனியும் மாணவி!’.. ‘வீடியோவால் பரபரப்பு!’.. ‘களத்தில் இறங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குழு!’

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாக , பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி ஒருவரின் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து, மாணவர் ஒருவர் செயின் ஒன்றை அணிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாணவியும் வெட்கித் தலைகுனிந்தபடி செயினை தாலி போல ஏற்றுக்கொள்வதாய் 22 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவின் பின்னணியில் சாமி படத்தில் வரும் ‘இதுதானா.. இதுதானா’ பாடல் ஒலிக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருக்கும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த வீடியோ விளையாட்டாக எடுக்கப்பட்டதா? அல்லது டிக்டாக்கிற்காக எடுக்கப்பட்டதா? உள்ளிட்ட இன்ன பிற காரணங்களை அவர்களிடம் விசாரித்து வருவதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.