டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!

மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்  டாக் செயலி ஆபாசம், கலாச்சார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார். இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி சில நாட்கள் முன்னர் 'டிக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது.

டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆணை டிக் டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடுவது, ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது. ஏப்ரல் 16-க்குள் தடை செய்ய மத்திய அரசினை, உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக்” கொண்டுள்ளதாக கூறியிருந்தது.

டிக் டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது. “நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக் டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

டிக் டாக்கை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க, உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 -ம் தேதிக்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TIKTOK, SUPREMECOURT, HIGHCOURT