VIDEO : "விவாகரத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணேன் & மகனா என் அம்மாவுக்கு நான்"... குடும்பம் குறித்து சவுக்கு சங்கர் உருக்கம்.! Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளிலும் தன் கருத்துக்களையும் விமர்சனங்களையும் டிவி மற்றும் யூடியூப்களில் முன்வைத்து வந்தவர். பல முன்னணி தற்கால நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.
இதனிடையே, நீதித்துறையை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக் கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் விடுதலை ஆவார் என கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்தது. அப்படி ஒரு சூழலில், சவுக்கு சங்கருக்கு சென்னை எழும்பூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதன் பின்னர், சமீபத்தில் சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்.
இந்த நிலையில், தற்போது Behindwoods O2 நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை சவுக்கு சங்கர் அளித்துள்ளார். அப்போது சிறையில் தான் சந்தித்த அனுபவங்கள் குறித்தும், தாய் மற்றும் சகோதரி ஆகியோர் மனநிலை குறித்தும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடனான சந்திப்பு குறித்தும் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது திருமணம் குறித்தும் பேசிய சவுக்கு சங்கர், "விவாகரத்துக்கு பிறகு நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன். ஒரு குழந்தையும் பெற்று கொண்டோம். ஆனால், இருவரும் அப்படியே பிரிந்து விட்டோம்" என தெரிவித்தார். அதே போல, தாய்க்காக தான் எதுவுமே செய்யவில்லை என பேசிய சவுக்கு சங்கர், "ஒரு தாய்க்கு என்ன வேணும். பையன் வேலைக்கு போகணும். கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தைங்க இருக்கணும். பேரக் குழந்தைங்களை கொஞ்சிட்டு அமைதியா நம்ம வயதான காலத்தை ஓட்ட வேண்டும்ன்னு தோணும். ஆனா, இதுல எந்த சந்தோஷத்தையும் நான் என் அம்மாவுக்கு கொடுக்கல" என சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.
அதே போல சிறையில்; இருந்த தன்னை வெளிக்கொண்டு வர உதவிய தன் சகோதரியின் பங்கு பற்றியும் சவுக்கு சங்கர் உருக்கமாக பேசியுள்ளார்.
Also Read | சபரிமலையில்.. புலி வாகனம் மீது ஐயப்பன் வேடமணிந்து கம்பீரமாக வலம் வந்த சிறுமி
மற்ற செய்திகள்