"வடமாநிலத்தவர் உடல் உழைப்பை கொடுக்க தயாரா இருக்காங்க.. நம் இளைஞர்கள்?" - சவுக்கு சங்கர் ஆவேச பதிலடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் வருகை பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் சவுக்கு சங்கர்.
Images are subject to © copyright to their respective owners.
தமிழகத்தில் அண்மைக் காலமாகவே வட மாநில தொழிலாளர்கள் பற்றிய பேச்சு அதிகரித்திருக்கிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களின் வருகை அதிகமாக இருப்பதாகவும் இதனால் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
குறிப்பாக கட்டுமான தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலார்கள் அதிக அளவில் கூலி தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும், தமிழகத்தின் அனைத்து ரயில்வே நிலையங்களிலும் வடமாநில மக்களின் வருகை அதிகரித்திருப்பது பற்றியும் சமூக வலை தளங்களில் பலரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக நெறிமுறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் நம்முடைய சேனல் நடத்தும் 'ஒருநாள் டீச்சர்' என்னும் நிகழ்ச்சியில் சவுக்கு சங்கர் கலந்துகொண்டார். மாணவ மாணவிகள், குடிமைப்பணி தேர்வாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷங்கருடன் உரையாடினர். அப்போது ஒருவர் "தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வருவதால் இங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது" என்றார். அப்போது பேசிய சங்கர்,"உடல் உழைப்பை கொடுக்க யாரு தயாரா இருக்கீங்க?, ஹோட்டல்ல தட்டு கழுவுற வேலைக்கு அவங்க போறாங்க. மெட்ரோ வேலையில பாலத்துக்கு மேல ஏறி வேலை பார்க்க அவங்க ரெடியா இருக்காங்க. இந்த வேலையெல்லாம் யாராவது செய்யணும்ல. அப்போதானே மெட்ரோ ரயில் ஓடும். நீங்க செய்ய தயாரா இல்ல. அவன் வந்து செய்யுறான். உங்களுக்கு என்ன பிரச்சனை?"
"உங்க சாப்பாட்டை பறிக்கிறானா? நீங்க செய்யாத வேலையை தான் அவங்க செய்யுறாங்க. கொஞ்சம் சிந்தனையை விரிவுபடுத்துங்க. பெங்களூர்ல ஐடி-ல தமிழர்கள் தான் அதிகமா இருக்காங்க. அங்க இருந்து அவங்களை எல்லாம் அனுப்புனா என்ன பண்றது? உலகமே ஒரு குளோபல் வில்லேஜ்-னு நினைக்க பழகுங்க. இதெல்லாம் படிப்படியா தான் கடந்து வரணும்" என்றார்.
மற்ற செய்திகள்