எட்டே நாளில்.. இறைவன் கொடுத்த GIFT.. சவுதியில் நிகழ்ந்த அதிசயம்..! நெகிழ்ந்து போன பாத்திமா சபரிமாலா..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேச்சாளரும், சமூக செயல்பாட்டாளருமான சபரிமாலா இறைவன் தனக்கு மிகப்பெரிய பரிசை வழங்கி உள்ளதாக தெரிவவித்திருக்கிறார்.
Also Read | மொத்த கிராமமும் லிவிங் டு கெதர் தான்.. தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா..? வியக்கவைக்கும் கலாச்சாரம்..
சபரிமாலா
மதுரை மாவட்டத்தில் அழகர்சாமி மற்றும் கலையரசி தம்பதிக்கு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தவர் சபரிமாலா. இவர் திண்டுக்கல்லில் தனது கல்வியை முடித்துவிட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள எள்ளேரி பள்ளியில் 2002 ஆம் ஆண்டு ஆசிரியராக சேர்ந்தார். கல்விப் பணியை தாண்டி சமூக மாற்றத்திற்காகவும் குரல் கொடுத்து வந்த இவர் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் அறியப்படுகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களை பட்டிமன்றங்களில் பேச வைக்க பெருமுயற்சி எடுத்த சபரிமாலா தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளில் பேசிய அனுபவமும் கொண்டவர். தொடர்ந்து பல பட்டிமன்றங்களில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். பின்னர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்த சபரிமாலா சமூக சேவையில் ஈடுபட்டுவந்தார்.
ஹஜ் யாத்திரை
இந்நிலையில் சபரிமாலா சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு சென்றிருந்தார். அப்போது தான் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாகவும் இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவே சவுதி அரேபியாவிற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது பெயரை பாத்திமா சபரிமாலா என மாற்றிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சவுதி அரசாங்கம் தனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்திருப்பதாக சபரிமாலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சவுதி அரசு வழங்கிய சான்றிதழ் ஒன்றை கையில் ஏந்தியவாறு சபரிமாலா பேசிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புனிதப் பணி
இஸ்லாமியர்களின் புனித இடமாக கருதப்படும் காபாவில் புனித திரை ஒன்று போர்த்தப்படும். இதனை 'கிஸ்வா' என்று அழைக்கின்றனர். இதில் இறை வசனங்களை நூல் கொண்டு தைத்து அலங்கரிப்பர். சவுதி சென்ற சபரிமாலா இந்த புனித திரை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டார். இதற்காகவே சவுதி அரசாங்கம் அவருக்கு இந்த சான்றிதழை வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மெக்காவின் நுழைவு வாயிலில் சவுதி அரசு அளித்த சான்றிதழை கையில் ஏந்தியவாறு பாத்திமா சபரிமாலா பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்