Divya Sathyaraj : “பணத்த விட மனித நேயம்தான் முக்கியம்... நோயாளிகளை சுரண்டாதீங்க!” .. மெடிக்கல் கடைகளுக்கு சத்யராஜ் மகள் வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சத்யராஜ். தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்த சத்யராஜ், தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Divya Sathyaraj : “பணத்த விட மனித நேயம்தான் முக்கியம்... நோயாளிகளை சுரண்டாதீங்க!” .. மெடிக்கல் கடைகளுக்கு சத்யராஜ் மகள் வேண்டுகோள்!

Also Read | ஆற்றில் கிடந்த இளம்பெண் உடல்.. துப்பு கிடைக்காம போலீஸ் தவிச்சப்போ.. பெண்ணின் செருப்பில் இருந்த 'Clue'!!.. திடுக்கிடும் சம்பவம்!!

தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கிறார். இவரது மகன் சத்யராஜ் தமிழில் இளம் ஹீரோவாக விளங்கி வருகிறார். இந்நிலையில் சத்யராஜின் மகளும் நியூட்ரிஷியனிஸ்டுமான திவ்யா சத்யராஜ், மருந்துகள் பயன்படுத்துவது, விற்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "காலாவதி தேதிகள் முடிந்து போன மருந்துகளை எடுத்துக் கொள்வதால் பல உடல் உபாதைகள் வரலாம். மக்களாகிய நீங்கள் வாங்கும் எல்லா மருந்துகளுக்கும் மளிகை பொருட்களுக்கும் எக்ஸ்பைரி தேதி பார்த்து, பரிசோதித்து வாங்குங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் மருந்துகள், சிரஞ்சி, சிரப், க்ரீம்ஸ், ஷாம்பூ ,  பால் பவுடர் இப்படி எது வாங்கினாலும் எக்ஸ்பைரி தேதி பார்த்து வாங்குங்கள்." என குறிப்பிட்டுள்ளார்.

Sathyaraj daughter Divya request to medical shops

மேலும் இது குறித்து மருந்தக உரிமையாளர்களுக்கு அவர் வைத்துள்ள வேண்டுகோளில், "மக்கள் எல்லாரும் கட்டப்பட்டு சம்பாதித்த காசில் தான் மருந்துகளை வாங்குகிறார்கள். அவர்கள் வாங்குகிற மருந்துகள் அவர்களின் நோய்களை குணப்படுத்தும் என்கின்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். அவர்களின்  அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது மனித நேயமற்ற செயல்.  பணத்தை விட மனித நேயம்தான் முக்கியம். மருத்துவ துறைக்கென ஒரு நியாயம், தர்மம் இருக்கு என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் கடைகளில் எக்ஸ்பைரி தேதி முடிந்து போன மருந்துகளை அப்புறப்படுத்த ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும் நீங்கள். நோயாளிகளை சுரண்டுவதை நிறுத்துங்கள். நன்றி, வணக்கம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read | VIDEO: "லத்தி, துப்பக்கி எப்பவுமே கார்ல இருக்கும்.. இறங்கி அடிச்சாப்றம்தான் அவன் ரவுடினு தெரிஞ்சுது" - சினிமாவை மிஞ்சும் ஆக்‌ஷன் சம்வங்கள் பண்ணிய விஜயகுமார் IPS | Exclusive

DIVYA SATHYARAJ, SATHYARAJ

மற்ற செய்திகள்