'ரொம்ப அவசரம்'... செக் போஸ்டில் 'ஐடி கார்டை' காட்டி தப்பிய இன்ஸ்பெக்டர்.... சிபிசிஐடி போலீசாரிடம் 'சிக்கியது' எப்படி?... பரபரப்பு தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவை ஒட்டுமொத்தமாக உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் அடுத்தடுத்து பலரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்றிரவு எஸ்.ஐ ரகு கணேஷ் கைது  செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று காலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

'ரொம்ப அவசரம்'... செக் போஸ்டில் 'ஐடி கார்டை' காட்டி தப்பிய இன்ஸ்பெக்டர்.... சிபிசிஐடி போலீசாரிடம் 'சிக்கியது' எப்படி?... பரபரப்பு தகவல்கள்!

எனினும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்படாமல் இருந்தது, பொதுமக்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரையும் இன்று காலை சிபிசிஐடி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டது குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நெல்லையில் தங்கியிருந்த ஸ்ரீதர் தன்னுடைய சொந்த ஊரான தேனி சென்று பாதுகாப்பு தேடிக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய காரில் தேனி நோக்கி புறப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்துக்குச் சென்ற அவரது காரை கங்கைகொண்டான் செக்-போஸ்ட்டில் இருந்தவர்கள் மறித்துள்ளனர். இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லையைக் கடக்க அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்ததற்கு, தன்னுடைய இன்ஸ்பெக்டர் ஐடி கார்டைக் காட்டி, அவசரமாகச் செல்ல வேண்டுமெனக் கூறி தப்பிச் சென்றிருக்கிறார்.

இதுகுறித்த தகவல் சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவர அவரை விரட்டிச்சென்று கோவில்பட்டி அருகே மடக்கி பிடித்துள்ளனர். தொடர்ந்து அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தங்களுடைய வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி கொண்டு சென்று விட்டார்கள்.

மற்ற செய்திகள்