மறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர்...இரவு முழுக்க 'நோ' தூக்கம்... தனித்தனி பிளாக்கால் 'அப்செட்' ஆன இன்ஸ்பெக்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறைக்குள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர்...இரவு முழுக்க 'நோ' தூக்கம்... தனித்தனி பிளாக்கால் 'அப்செட்' ஆன இன்ஸ்பெக்டர்!

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜும் சிபிசிஐடி போலீசாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நால்வரும் எப்படி இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்றிரவு முழுவதும் அவர் தூங்காமல் இருந்துள்ளார். மேலும் மறுநாள் அவர் சரியாக சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல் நாள் அப்செட்டாக இருந்த ரகு கணேஷ், மறுநாள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோரை பார்த்ததும் சற்று  மலர்ச்சியுடன் காணப்பட்டு இருக்கிறார்.

நால்வரையும் ஒரே பிளாக்கில் அடைக்காமல் தனித்தனி பிளாக்கில் அடைத்து வைத்துள்ளனர்.இதனால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்செட் ஆகி இருக்கிறாராம். எனினும் சிறையில் அளிக்கப்படும் உணவை ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுகிறாராம். காலையில் நியூஸ் பேப்பர் கொடுக்கப்படுவது வழக்கம் என்றாலும் அனைத்து பேப்பர்களிலும் இவர்களை பற்றிய செய்திகள் இடம்பிடித்து இருப்பதால் அவர்கள் நால்வருக்கும் பேப்பர் அளிக்கப்படவில்லையாம்.

காலையில் குளிக்கும்போது, பாத்ரூம் செல்லும்போது மற்றும் உணவுக்குச் செல்லும்போது மட்டுமே நான்கு பேரும் பேசிக் கொள்ள இயலும். இன்று காலை குளிக்கும்போதும் சாப்பிடும்போதும் நால்வரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யான பழனி உத்தரவிட்டு இருப்பதால் யாரும் அநாவசியமாக இவர்களுடன் பேசுவது இல்லையாம்.

மற்ற செய்திகள்