"விடுதலை விவகாரம்!".. கர்நாடக சிறைத்துறை நிர்வாகத்துக்கு சசிகலா எழுதியுள்ள பரபரப்பு கடிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்த தகவலை பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்திருந்தது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தம்மைப் பற்றிய தகவல்களை 3-ஆம் நபருக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சசிகலா, தன்னுடைய சிறைவாசம் மற்றும் விடுதலை குறித்த விவரங்களை 3ஆம் நபருக்கு அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சிறை நிர்வாகத்தை நோக்கி சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது உள்ளிட்ட நரசிம்ம மூர்த்தியின் கோரிக்கைகளுக்குண்டான தகவல்களை அளிக்க சிறைத்துறை நிர்வாகம் மறுத்துள்ளது.
மற்ற செய்திகள்