'விடுதலை' தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'சசிகலா'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து8 வருகிற 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'விடுதலை' தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் 'மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'சசிகலா'!

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில்தான் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென சளி, இருமல், மூச்சு தினறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: "சித்து கஞ்சா அடிச்சிருக்கணும்".. "கதவ பீஸ் பீஸா உடைச்சுருப்பேன்.. என் புத்தி தெரியும்ல?" - நண்பருடன் ஹேமந்த் பேசும் முழு AUDIO!

அத்துடன், ஒருவாரமாக சசிகலாவுக்கு காய்ச்சல் இருந்ததாகவும், அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததாகவும் சிறை நிர்வாகம் தரப்பில் கூறியதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  அதே சமயம் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவே பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்