'4 வருசமா அலைஞ்சு பாத்தாரு'... 'ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்'... 'நான் யாரை சொல்றேன்னு புரியுதா'... ஆவேசமான முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கட்சியைக் கைப்பற்றச் சிலர் திட்டமிட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தனது தேர்தல் பரப்புரையை ஏற்கனவே தொடங்கிய முதல்வர் இன்று கிருஷ்ணகிரியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மீண்டும் அவர் புறப்பட்டுவிட்டார். 4 ஆண்டுக் காலம் அலைந்து அலைந்து பார்த்தார். நான் சொல்வது யார் என்று உங்களுக்குத் தெரியும். டிடிவி தினகரன். அவர் கட்சியில் 10 ஆண்டுக் காலம் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்.
ஏதோ சந்தர்ப்பவாதத்தில் கட்சியில் இணைந்து கொண்டார். இப்போது சதி வேலை செய்து கொண்டிருக்கிறார். ஒருபோதும் அவர்களை அதிமுகவில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது தொண்டர் ஆளுகின்ற கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலை வணங்காது. அடிமட்ட தொண்டனாக இருப்போர் மட்டும்தான் அதிமுகவிலிருந்து இனி முதலமைச்சராக முடியும் எனக் கூறினார்.
மேலும் சிலர் திட்டமிட்டு அதிமுகவைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என ஆவேசமாகப் பேசிய முதல்வர், சசிகலா, டிடிவியை அதிமுகவில் சேர்க்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்