"என்ன படம் இது.. கண்டிப்பா ஓடாது".. சூர்யவம்சத்தை விமர்சித்த பெரிய டைரக்டர்.. சரத்குமார் ஷேரிங்ஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய் நடிப்பில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், ஜனவரி மாதம் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

"என்ன படம் இது.. கண்டிப்பா ஓடாது".. சூர்யவம்சத்தை விமர்சித்த பெரிய டைரக்டர்.. சரத்குமார் ஷேரிங்ஸ்

வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருந்தார். இதில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்திருந்தனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி இருந்தனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்திருந்தனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்ததையடுத்து சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் இந்த படம் வசூல் செய்திருந்ததாகவும் படக்குழுவினர் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Sarath kumar about popular director review for suryavamsam

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வாரிசு படக்குழுவினர் பிரத்யேகமான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். இந்த நேர்காணலில் இயக்குனர் வம்சி, நடிகர்கள் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் நடிகர் விஜய் குறித்தும், வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஒரு படத்தை பலரும் விமர்சனம் செய்து கருத்துக்களை பேசி வருவது பற்றி குறிப்பிட்ட நடிகர் சரத்குமார், "சூர்யவம்சம் வந்து பெரிய ஹிட் ஆச்சு இல்ல, அந்த படத்தோட ஃபர்ஸ்ட் நாள் ஒரு ஷோ போட்டோம். நான் விக்ரமன் சார்ன்னு எல்லாரும் இருந்தோம். அப்போ மிகப்பெரிய ஒரு டைரக்டர் படம் பாத்தாரு. எங்களோட எதிர்பார்ப்பு படம் நல்லா இருக்கும்னு தான். 'என்னங்க படம் எடுத்து வச்சிருக்கீங்க இது எப்படி ஓடும்னு' சொல்லிட்டு அந்த டைரக்டர் போயிட்டாரு.

Sarath kumar about popular director review for suryavamsam

எல்லாருக்குமே பெரிய ஷாக், என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு போயிட்டாருன்னு. அப்புறம் பாத்தா அந்த படம் வந்து 250, 300 நாள் ஓடிச்சு. அதனால ஆடியன்ஸ் தான் ஒரு படத்தை ஓட வைக்கிறது எல்லாமே. அவங்களுக்கு வந்து என்ன புடிச்சிருக்கோ அதான் படத்துக்கு முக்கியம். அதே மாதிரி இந்த படத்தை வெற்றி படமாக மாத்துனதுக்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

SARATH KUMAR, SURYAVAMSAM, VARISU

மற்ற செய்திகள்