'ஹார்ட் அட்டாக் வரும்'...'கல்லூரி கேன்டீனில் இதெல்லாம் விற்க கூடாது... அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக கல்லூரி கேன்டீன்களில் எந்தெந்த நொறுக்கு தீனிகளை விற்க கூடாது என்பது குறித்து, தமிழக உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்கள்.

'ஹார்ட் அட்டாக் வரும்'...'கல்லூரி கேன்டீனில் இதெல்லாம் விற்க கூடாது... அதிரடி உத்தரவு!

சரியான முறையில் சரியான உணவை உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக உணவுபொருள் பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் வனஜா, என்னென்ன உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர், ''சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கை முறையினையும் மிகவும் பாதிக்கிறது.

எனவே கல்லூரி நிர்வாகம் கல்லூரி கேன்டீன்களில் இதுபோன்ற உணவுகளை விற்பதர்க்கு அனுமதிக்க கூடாது என கூறினார். மேலும் இது போன்ற துரித உணவுகளை தொடர்ந்து உண்பதால், உடல் பருமன் ஏற்படுவதோடு, அதில் கலக்கப்படும் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றால் மாரடைப்பு, கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு வடிகாலாக அமைந்து விடுகிறது'' என கூறினார்.

இதனிடையே இது போன்று தமிழகத்தில் உள்ள 48 தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு, உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் நோயில்லா வாழ்வை பெறலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் தமிழக கல்லூரி கேன்டீன்களில் சமோசா மற்றும் குர்குரே, லேஸ் போன்ற நொறுக்கு தீனி வகைகளை விற்க கூடாது என்று உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

COLLEGESTUDENT, COLLEGESTUDENTS, COLLEGE CANTEEN, SAMOSA