'தாலி கட்டுற நேரம் ஆச்சு தம்பி எங்க'... 'மண்டபத்தில் தம்பியை தேடிய மணப்பெண்'... 'தாலி கழுத்தில் ஏறியதும் தெரிய வந்த உண்மை'... நெஞ்சை பிழியும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திரைப்படத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும் போது நிஜ வாழ்க்கையில் எதிரிக்குக் கூட இப்படி நடக்கக் கூடாது என நினைப்பது உண்டு. அந்த வகையில் நெஞ்சைப் பிழியும் சோக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

'தாலி கட்டுற நேரம் ஆச்சு தம்பி எங்க'... 'மண்டபத்தில் தம்பியை தேடிய மணப்பெண்'... 'தாலி கழுத்தில் ஏறியதும் தெரிய வந்த உண்மை'... நெஞ்சை பிழியும் சோகம்!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் சகோதரிக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், அதற்கான திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திருமணம் நடைபெற இருந்த நிலையில், சகோதரியின் திருமண ஏற்பாடுகளை அவரது தம்பி ஜெகதீசன் முன்னின்று செய்து வந்தார்.

அந்த வகையில் திருமண நடைபெற இருந்த மண்டபத்தில், திருமண ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நள்ளிரவு நேரத்தில் ஜெகதீசன் மற்றும் ஜெகதீசனின் நண்பர்கள் அஜீத்குமார், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தொட்டில்பட்டியிலிருந்து திருமண மண்டபத்துக்குச் சென்றனர். அப்போது சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் உள்ள திருப்பத்தில் வேகமாகத் திரும்புகையில், எதிரே கரூரிலிருந்து ஓசூருக்குச் சென்ற பேருந்துடன் அவர்கள் மூவரும் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்ததும், 3 பேர் பயணித்ததும் தான் விபத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. சாலை விபத்தில் இறந்த ஜெகதீஷ் கூலி வேலைக்கும், கார்த்திகேயன் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பணியாற்றி வந்தனர். அஜீத் குமார் பொறியியல் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் ஜெகதீசன் இறந்த தகவலை அவரது பெற்றோருக்கும், சகோதரிக்கும் அவரது உறவினர்கள் தெரிவிக்கவில்லை. தாலி கட்டும் நேரத்தில் தம்பியைக் காணவில்லையே என அவரது சகோதரியும், பையனைக் காணவில்லை என பெற்றோரும் தேடியுள்ளார்கள்.

மணமகளுக்குத் தாலி கட்டிய பின்னர் தான் ஜெகதீசன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் தெரிவதற்கு முன்பு வரை மகிழ்ச்சியாக இருந்த திருமண வீடு அடுத்த நொடியே சோகத்தின் உச்சிக்குச் சென்றது. தம்பியை இழந்த மணமகளும், பையனை இழந்த பெற்றோரும் கதறி அழுதார்கள். இதையடுத்து திருமணம் முடிந்த கையேடு அனைவரும் பெரும் சோகத்தோடு மருத்துவமனைக்குச் சென்றனர். திருமண நாளில் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மற்ற செய்திகள்