"1 வயசுல குழந்தைய வெச்சுட்டு இப்படியா ஆகணும்?" - 'WhatsAppல் வந்த ஆடியோவைக் கேட்டு'... 'நொறுங்கிப்போன குடும்பம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் இளம்பெண் ஒருவர் சகோதரிக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலத்தை ஒட்டியுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31). ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் இவருக்கும், சங்கீதா (27) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சங்கீதா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீசார் சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே சங்கீதாவை பணம் மற்றும் நகை கேட்டு அவருடைய கணவர் வீட்டார் துன்புறுத்தி வந்ததாகவும், ஒரு வாரத்திற்கு முன்பு சங்கீதாவிடம் குடும்பச் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு வற்புறுத்தியதாகவும் அவருடைய குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியள்ளனர்.
மேலும் சங்கீதாவின் கணவர் அவரை பணம், நகை கேட்டு அடிக்கடி துன்புறுத்தியும், சில நேரங்களில் சந்தேகப்பட்டு அடித்து வந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்தே தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை, அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. சீனிவாசன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கீதா குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்