பாழடைந்த கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்.. நீரில் மிதந்த சாக்கு மூட்டை.. திறந்து பார்த்ததுல ஊரே ஆடி போயிடுச்சு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே அழகாபுரம் படையப்பா நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கிணற்றுக்குள் மிதந்த சாக்கு மூட்டையை பார்த்துள்ளனர்.
கிணற்றில் சாக்கு மூட்டை
பிறகு, அதனை வெளியே தூக்கி வந்து அவிழ்த்து பார்த்த போது, உள்ளே ஆண் ஒருவரின் உடல் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் உதவியுடன், உடல் பிரேத பரிசோதனைக்கு வேண்டி கொண்டு செல்லப்பட்ட நிலையில், அது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதிர்ச்சி தகவல்கள்
இதனிடையே, விஜயலட்சுமி மற்றும் குமரன் ஆகிய இரண்டு பேர், அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பாவிடம் சரண் அடைந்துள்ளனர். அப்போது தான், பாழடைந்த கிணற்றில் இறந்து கிடந்தது யார் என்பது பற்றியும், அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றியும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
சாக்கு மூட்டையில் இருந்தது வெங்கடேசன் என்ற நபர் என்பது தெரிய வந்தது. அவரது மனைவி தான் விஜயலட்சுமி. சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். போர்வெல் தொழிலாளியான இவரது மனைவியின் பெயர் விஜயலட்சுமி.
தகாத உறவு
விஜயலட்சுமியின் தங்கையின் பெயர் சாந்தி. இவருடைய கணவர் குமரன். இவர்கள் இருவரும், மிட்டாபுத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில், வெங்கடேசன் மற்றும் குமரன் ஆகியோரின் வீடு அருகருகே இருந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வேலைக்கு வேண்டி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் வெங்கடேசன்.
கண்டித்த சகோதரி
அந்த சமயத்தில், விஜயலட்சுமிக்கு தேவையான உதவிகளை, குமரன் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக, அவர்கள் இருவருக்கும், பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது. அது மட்டுமில்லாமல், இருவரும் தனியாக சந்தித்து, நெருக்கமாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் குமரன் மற்றும் சகோதரியின் நடவடிக்கை பற்றி, சாந்திக்கு தெரிய வரவே, இருவரையும் கண்டித்துள்ளார் அவர்.
எதையும் நிறுத்தல
ஆனாலும், குமரன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் செவி கொடுக்கவில்லை. இதனால், குமரனை விவாகரத்து செய்த சாந்தி, வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். அதே போல, குமரனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும், விஜயலட்சுமியுடன் தொடர்ந்து தொடர்பில் குமரன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவருக்கு தெரிந்த விஷயம்
இது பற்றி, விஜயலட்சுமியின் கணவர் வெங்கடேஷனுக்கும் தெரிய வந்துள்ளது. அவரும் சில தினங்களுக்கு முன், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அன்றிரவு வீட்டுக்கு வந்த வெங்கடேசன், குமரனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆத்திரத்தில் நடந்த சம்பவம்
அந்த சமயத்தில், மனைவியுடனான உறவு பற்றி, குமரனிடம் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. இதன் பெயரில் அங்கு தகராறு உருவாகவே, மனைவி மற்றும் குமரனை, வெங்கடேசன் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த குமரன், வெங்கடேசனை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு துணையாக, விஜயலட்சுமியும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர், வெங்கடேசன் உடலை சாக்கில் வைத்து கட்டி, பாழடைந்த கிணற்றில் இருவரும் வீசியுள்ளனர். தொடர்ந்து, வெங்கடேசன் உடலை போலீசார் மீட்டது பற்றி தெரிந்ததும், பயத்தில் குமரன் மற்றும் விஜலயட்சுமி ஆகியோர் சரண் அடைந்துள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்