'உனக்கு என்ன ஆகணும்'... 'உங்கள போல ஆஃபீசர் ஆகணும்'... 'கிராமத்திலேயே முதல் முறையா 10ம் வகுப்பு படித்த மாணவி'... நெகிழவைத்த எஸ்பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10ம் வகுப்புத் தேர்வினை கிராமத்திலே முதன் முதலாக எழுதிய மாணவியின் கல்வி செலவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்றுள்ள சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஐபிஎஸ் பாலமலை கிராமத்திற்கு ஆய்விற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள ஜெயந்தி என்ற மாணவி அந்த கிராமத்தில் முதல் முதலாக 10ம் வகுப்புத் தேர்வு எழுதிய செய்தியை அறிந்துள்ளார். அதோடு அந்த மாணவியைச் சந்திக்க முடிவு செய்த தீபா, அந்த மாணவியை அடுத்த நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துப் பேசியுள்ளார். அப்போது உனது லட்சியம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி உங்களைப் போல ஒரு அதிகாரி ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மாணவியின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்து போன தீபா கனிகர், உன்னுடைய கல்வி செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன், நீ நன்றாகப் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியக் குடிமைப் பணிகளுக்கான புத்தகங்களை வழங்கி மாணவி ஜெயந்தியை வாழ்த்தினார். எஸ்பி'யின் செயலால் நெகிழ்ந்து போன மாணவி ஜெயந்தி, நான் நன்றாகப் படிப்பேன் மேடம் என, எஸ்பி'யிடம் உறுதி அளித்தார். நன்றாகப் படிக்க வேண்டும் என ஆசைப்பட்ட மாணவியின் கல்வி செலவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ள சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
மற்ற செய்திகள்