'ஐயோ, யாராவது வாங்களேன்'... 'கழிவறைக்குள் கேட்ட முனங்கல் சத்தம்'... பதறிப்போய் திறந்து பார்த்தால்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

'ஐயோ, யாராவது வாங்களேன்'... 'கழிவறைக்குள் கேட்ட முனங்கல் சத்தம்'... பதறிப்போய் திறந்து பார்த்தால்!

சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு 95 வயது ஆகும் நிலையில்,  இவரது கணவர் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராதாவுக்கு 4 மகன்கள், இதில் 2 மகன்கள் இறந்து விட்டனர். இதை அடுத்து கடைசி மகனான ஸ்ரீதர் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். ஸ்ரீதர் டால்மியா போர்டில் பணிபுரிந்தார்.

இதனிடையே ராதாவுக்கு அரசின் சார்பில் ஓய்வூதிய தொகையும் வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்த சூழ்நிலையில் ஸ்ரீதர் வசித்துவந்த வீட்டின் பின்புற பகுதியிலிருந்து பெண் ஒருவரின் அழுகுரல் கேட்டது.

Salem: Son abandons 95-year-old mother in room near toilet

இதனை அறிந்த அந்த பகுதியினர் அருகில் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கழிவறையில் ராதா உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்தது தெரியவந்தது. தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பெற்ற மகனே மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Salem: Son abandons 95-year-old mother in room near toilet

உடனே சம்பவம் குறித்து விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டார் தொடர்ந்து சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லம் நடத்தி வரும் போதிமரம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கவிட்டது. போதிமரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவை மீட்டு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மேலும் அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்தனர்.

மற்ற செய்திகள்