பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார்.

பிரபல சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

சேலத்தை தலைமை இடமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் டாக்டர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பம் சேவை புரிந்து வருகின்றது. டாக்டர் சிவராஜ் சிவகுமார் குறிப்பாக ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார்.

Salem Siddha doctor Sivaraj Sivakumar passed away

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்