‘சாமி தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பிய பயணிகள்’.. ‘அசுரவேகத்தில் மோதிய ஆம்னி பேருந்து’.. சேலம் அருகே கோரவிபத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓமலூர் அருகே வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் நேபாள சுற்றுலா பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாள நாட்டை சேர்ந்த 32 பேர் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள கோயில்கள் தரிசனம் முடித்து ஊருக்கு திரும்பியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரிபள்ளம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது ஓய்வெடுக்க எண்ணி சாலையோரம் உள்ள காளியம்மன் கோயில் மண்டபத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். இதனால் வேன் டிரைவர் கோயிலை நோக்கி வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று வேனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.