"23 வருசமா வேற நாட்டுல இருந்தா.." மகளைக் கண்டதும் ஆனந்த கண்ணீர்.. மனதை உருக வைக்கும் பின்னணி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் : ஓமலூர் அருகே 23 வருடங்களுக்கு தன்னுடைய மகளைக் கண்டதால், ஆனந்த கண்ணீர் வடித்து தாய் உருகும் சம்பவம், நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

"23 வருசமா வேற நாட்டுல இருந்தா.." மகளைக் கண்டதும் ஆனந்த கண்ணீர்.. மனதை உருக வைக்கும் பின்னணி

தர்மபுரி மாவட்டம், தோப்பூர் அருகே ஜருகு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி பெயர் அமுதா. இந்த தம்பதியருக்கு கடந்த 1996 ஆம் ஆண்டு, முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த சில வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு மத்தியில், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்த ரங்கநாதன், சாராயம் குடித்து ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி முடிவு

இதன் காரணமாக, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, காலத்தை கழிக்க, அமுதா மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  கணவர் சரி வர இல்லாமல், ஊதாரியாக இருப்பதால், 2 பெண்களையும் பார்த்துக் கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்த அமுதா, ஒரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.

Salem mother daughter meets after 23 years tears in happiness

கணவர் மறைவு

தனக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை, சேலம் அரசு மருத்துவமனையில், கிறிஸ்துவ மிஷன் நிறுவனத்திற்கு தத்து கொடுக்க முடிவெடுத்தார் அமுதா. பின்பு, அந்த பெண் குழந்தை தனியார் கிறிஸ்துவ மிஷனில் வளர்ந்து வந்துள்ளது. அதன் பிறகு, அடுத்த சில ஆண்டுகளில், உடல்நலக் குறைவால், ரங்கநாதன் இறந்து போய் விட்டார்.

Salem mother daughter meets after 23 years tears in happiness

மகளுக்கு வந்த சந்தேகம்

இந்நிலையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதியர், அமுதாவின் குழந்தையை தத்து எடுத்து, அமுதவல்லி என பெயர் சூட்டி வளர்த்ததாக கூறப்படுகிறது. தற்போது 23 வயதை அடைந்திருக்கும் அமுதவல்லிக்கு, சில ஆண்டுகளாகவே ஒரு சந்தேகம் இருந்து வந்துள்ளது. தனது பெற்றோர்கள் நிறம் சிகப்பாகவும், தன்னுடைய நிறம் மாநிறமாகவும் இருப்பதால், அதன் காரணம் என்ன என்பதை அறிய முயற்சி செய்துள்ளார்.

தங்கம் விலை.. ஒரே நாளில் கண்ட சரிவு.. நகை வாங்க போறவங்களுக்கு செம லக் தான் போங்க

Salem mother daughter meets after 23 years tears in happiness

ஏற்பட்ட ஆவல்

அதன் பிறகு, தன்னுடைய பெற்றோரிடம் அமுதவல்லி இது பற்றி கேட்க, அவரின் தொந்தரவு தாங்க முடியாத பெற்றோர்களும் உண்மையை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து தன்னை தத்து எடுத்து வந்ததாக பெற்றோர்கள் கூறியதால், தன்னை ஈன்றெடுத்த தாயைக் காண வேண்டும் என்ற ஆவல், அமுதவ்வல்லிக்கு உருவாகியுள்ளது.

Salem mother daughter meets after 23 years tears in happiness

இந்தியா வந்த அமுதவல்லி

தன்னுடைய ஆசையை வளர்ப்பு பெற்றோர்களிடம் அமுதவல்லி தெரிவிக்கவே, ஆரமபத்தில் அவர்கள்  மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமுதவல்லி வற்புறுத்தியதன் பெயரில், இறுதியில் தாயைக் காண வளர்ப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு வந்த அமுதவல்லி, முதலில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள தந்தை ஊரான ஜருகுக்கு சென்றுள்ளார்.

Prepaid Validity.. இனி 28 நாட்கள் மட்டும் போதாது.. டிராய் போட்ட சூப்பர் உத்தரவு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Salem mother daughter meets after 23 years tears in happiness

தாய் ஆனந்த கண்ணீர்

தந்தை இறந்த பிறகு, அங்கிருந்த அம்மா தன்னுடைய சொந்த வீடான சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள பூசாரிப்பட்டி இந்திரா நகர் பகுதிக்கு வந்ததை அமுதவல்லி அறிந்துள்ளார். தொடர்ந்து, அங்கு சென்ற அமுதவல்லியைக் கண்ட தாய் அமுதா, ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு, தன்னுடைய மகளைக் கண்டதால், கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். மேலும்,  அமுதவல்லிக்கு தமிழ் கலாச்சாரத்தை பற்றி சொல்லிக் கொடுத்துள்ளனர். அத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து, கேக் வெட்டி கொண்டாடவும் செய்துள்ளனர்.

Salem mother daughter meets after 23 years tears in happiness

23 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டாலும், தமிழ் மொழி தெரியாத அமுதவல்லி, தாயிடம் தாய் மொழியில் பேச முடியவில்லையே எனவும் ஏங்கினார். மொழிகளைக் கடந்து, தாய் - மகள் அன்பில் பேசிக் கொண்ட இந்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

SALEM MOTHER DAUGHTER, 23 YEARS TEARS, சேலம், தாய்

மற்ற செய்திகள்