3 குழந்தைகளுக்கு தாயான... 35 வயது காதலியை... நடு ரோட்டில் வைத்து காதலன் செய்த கொடூரச் செயல்!.. பதபதைக்கு வைக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதலியை நள்ளிரவில் எரித்துக் கொலை செய்த ரவுடியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்தவர் 39 வயதான செந்தில்குமார். கறிக்கடை தொழிலாளியான செந்தில் குமாருக்கு, மனைவியும் 10 வயதில் மகளும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
காவல்நிலையங்களில் இவர் ஒரு சரித்திரக் குற்றவாளியாகப் பதிவாகியுள்ளார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. மேட்டூர் அடுத்த கொளத்தூர் அடுத்த அய்யம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பார்வதி. இவரது கணவர் முருகன் இறந்து விட்டார். பார்வதிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள சித்ரதுர்காவில் கல்குவாரியில் பார்வதியும், செந்தில்குமாரும் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் சொந்த ஊர் திரும்பிய பின், பார்வதிக்கு மேலும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் செந்தில்குமார் பார்வதியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு அய்யம்புதூரில் உள்ள பார்வதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் பார்வதி வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார் செந்தில்குமார். ஆத்திரமடைந்த செந்தில்குமார், பார்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் சண்டை போட்டுக் கொண்டே தெருவுக்கு வந்து விட்டனர். அந்த நேரத்தில், மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த மண்ணெண்ணெயை பார்வதி, மீது ஊற்றிய செந்தில்குமார், அவர் மீது தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அலறிய பார்வதியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பார்வதி திங்கள் அதிகாலையில் உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்த கொளத்தூர் போலீசார் மேட்டூரில் பதுங்கியிருந்த செந்தில்குமாரைக் கைது செய்தனர். காதலியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரவுடி, அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்




