தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று சேலம் கொரோனா இல்லாத மாநகராட்சி உள்ளதாக மாகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி முதல் கோயம்பேடு பரவலால் சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே கொரோனா இல்லாத பச்சை மண்டலமான கிருஷ்ணகிரியிலும் கொரோனா பாதிப்பு 20 ஆக ஆனது.
ஏற்கனவே ஈரோடு, திருப்பூர், நேற்று கோவை, நாமக்கல் ஆகியவை முழுமையாக விடுபட்டுள்ளன. சேலத்தில் 21 நாட்களாக எந்த பாதிப்பு இல்லை. இந்நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த 35 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா இல்லாத மேற்கு மாவட்டங்களில் சேலமும் இணைகிறது.
இதைதவிர்த்து, நீலகிரி - 3, தருமபுரி - 4 பேர், புதுக்கோட்டை- 4 பேர், திருவாரூர் - 4 பேர், கன்னியாகுமரி- 9, தூத்துக்குடி -9 பேர், திருப்பத்தூர் 10 பேர் என இந்த மாவட்டங்களில் குறைவானவர்களே சிகிச்சை பெற்று விரைவில் இந்த மாவட்டங்கள் எல்லாம் கொரோனா இல்லாத மாவட்டங்களில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.