VTK M Logo Top
Sinam M Logo Top

திருட போன வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் பண்ணிய "அடடே.." திருடர்கள்!!..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டில் திருடி முடித்து விட்டு, திருடர்கள் அங்கே செய்த விஷயம் தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

திருட போன வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் பண்ணிய "அடடே.." திருடர்கள்!!..

Also Read | "ஹைய்யா ஜாலி ஜாலி‌.." தாலி கட்டுறப்போ மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த கல்யாண பெண்..!!!

சேலம் மாவட்டம், பெரமனூர் மேயர் நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பாக்கியம். இவருக்கு 69 வயதாகும் நிலையில், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதில் ஒரு மகன் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இன்னொரு மகன் வெளிநாட்டில் மருத்துவராக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தனது கணவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், சேலத்தில் உள்ள வீட்டில் பாக்கியம் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்.

Salem burglars after robbery clean house with water

இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோவையில் உள்ள மகனின் வீட்டிற்கு சென்றுள்ளார் பாக்கியம். அந்த சமயத்தில் கடும் பரபரப்பு சம்பவம் ஒன்று பாக்கியத்தின் வீட்டில் அரங்கேறி உள்ளது. பாக்கியத்தின் வீட்டின் பூட்டு, உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டதும் அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதன் பெயரில், பாக்கியத்தின் வீட்டிற்கு வந்து போலீசார் ஆய்வினை செய்தனர்.

அப்போது, பாக்கியம் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடு போனது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த திருட்டு பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக, வீட்டில் யாரும் இல்லை என்பதை சரியாக நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

Salem burglars after robbery clean house with water

அதே போல, கைரேகை பதிவாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டை தண்ணீரால் அவர்கள் கழுவி சுத்தம் செய்து விட்டும் சென்றுள்ளனர். மேலும், பீரோ, ஜன்னல் கம்பி உள்ளிட்ட இடங்களையும் துணியால் துடைத்து சுத்தம் செய்துள்ளனர் திருடர்கள். இருந்தாலும் சில இடங்களில் கைரேகைகள் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர் போலீசார்.

Also Read | ராணி எலிசபெத்துக்காக.. 30 வருஷம் முன்னாடியே தயாரான சவப்பெட்டி.. "அதுக்குள்ள இத்தன விஷயம் வேற இருக்கா?"

SALEM, SALEM BURGLARS, ROBBERY, CLEAN HOUSE, WATER

மற்ற செய்திகள்