"16 வயசுல.. இப்படி ஒரு சாதனை.. சான்ஸே இல்லை".. தமிழக சிறுவனை பாராட்டிய சச்சின்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புகழ்பெற்ற ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுள் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தாவும் ஒருவர் ஆவார். 13 வயதான இவர் இந்தத் தொடரில் இதுவரையில் 8 புள்ளிகளை பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் சேம்பியனான மெக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

"16 வயசுல.. இப்படி ஒரு சாதனை.. சான்ஸே இல்லை".. தமிழக சிறுவனை பாராட்டிய சச்சின்..!

ஒரு ஒட்டு கூட வாங்கல.. சிவகங்கை மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு வந்த சோதனை..!

சச்சின் பாராட்டு

இந்நிலையில், கார்ல்சனை வென்ற பிரக்ஞானந்தாவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பாராட்டியுள்ளார். 16 வயதில் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில்," பிரக்ஞானந்தா குறித்து பெருமை கொள்கிறேன்.16 வயதில் மகத்தான வீரரான மெக்னஸ் கார்ல்சனை கருப்பு நிற காய்களை நகர்த்துதலின் போது தோற்க்கடித்திருப்பது மாயாஜாலம் போல இருந்தது. செஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள். இந்தியாவே உங்களால் பெருமைப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sachin Tendulkar praise Tamilnadu chess grandmaster Praggnanandhaa

சச்சின் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக பிரக்ஞானந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏர்திங்ஸ் செஸ் தொடர்

கார்ல்சன் உடனான போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக காய்களை நகர்த்தினார் பிரக்ஞானந்தா. கருப்பு நிற காய்களுடன் அபாரமாக விளையாடி இவர் டார்ஸ்ச் வகை கேம்-படி ஆடி வெற்றியும் பெற்றார்.

ஏர்திங்ஸ் ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் முதல் சுற்றில் ஒரு வீரருக்கு 15 போட்டிகள் நடைபெறும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளும் டிரா செய்தால் ஒரு புள்ளியும் வழங்கப்படும்.

12 வது இடம்

இந்தத் தொடரில் இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்ஞானந்தா, 8 புள்ளிகளை பெற்றிருக்கிறார். இதன்மூலம் அவர் 12 வது இடத்தில் இருக்கிறார். நடப்பு தொடரில் லெவ் அர்னோனியை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் தொடரில் கார்ல்சன் 19 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி

CRICKET LEGEND, SACHIN TENDULKAR, TAMILNADU CHESS GRANDMASTER PRAGGNANANDHAA, BEAT CARLSON, சச்சின் பாராட்டு, பிரக்ஞானந்தா

மற்ற செய்திகள்