VIDEO : சாத்தான்குளம் தந்தை - மகன் 'உயிரிழப்பு' விவகாரம்... 'சிபிஐ' விசாரிக்க தமிழக 'முதல்வர்' அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், ஊரடங்கை மீறி கடையை திறந்ததன் பெயரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS