‘தடுப்பூசி வந்தா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா’.... ‘ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானி’ கூறும் ‘பகீர்’ தகவல் வயிற்றில் ‘புளியைக் கரைக்குதே!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வேலை செய்யாமல் கூட போகலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவிய முன்னாள் மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

‘தடுப்பூசி வந்தா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா’.... ‘ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானி’ கூறும் ‘பகீர்’ தகவல் வயிற்றில் ‘புளியைக் கரைக்குதே!’

ALSO READ: “அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது!”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியரான சர் ஜான் பெல், பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸை விட தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மிகவும் மாறுபட்டது என்றும், பழைய கொரோனாவை விட இது அதிக வீரியம் மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

SA Covid mutation may BEAT current vaccines Oxfords Sir John Bell

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் பிரிட்டனில் உருவாகியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக செயல்பட்டாலும் கூட, அது தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா என்பது கேள்விக் குறி தான் என்று அவர் தெரிவித்துள்ளார். 501.V2 என்று தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவின் இந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸில் புரதக் கட்டமைப்பில் கணிசமான மாற்றங்கள் இருப்பதாகவும், அதனால் அவை தடுப்பு மருந்துகளை எதிர்க்க வல்லது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ALSO READ: 'எப்பேற்பட்ட டெக் மில்லியனர்!'.. ‘ரியாலிட்டி ஷோவில் இருந்து நீக்கப்பட்ட பின் நடந்தது என்ன?’.. பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!

எனினும் கோவிட் தடுப்பூசி என்பது நோய்க்கிருமியை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்துக்கு கற்பித்து, அதன் மூலம் உடலில் ஆண்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த ஆண்டிபாடிகள் மீண்டும் இந்த வைரஸ் தாக்குவதற்கு எதிராக போராடுவதற்காக நோய் எதிர்ப்புப் புரதங்களை தயாரித்து சேமித்து வைக்கின்றன. 

SA Covid mutation may BEAT current vaccines Oxfords Sir John Bell

ALSO READ: ‘அமேசான் எங்கள அழிக்கப் பாக்குது!’.. வேதனை தெரிவித்து, பேட்டியின்போது பிரபல ரீடெயில் நிறுவனர் கூறிய பகீர் குற்றச்சாட்டு!

அதே சமயம், இந்த வைரஸ் அதன் புரதங்களை மாற்றியமைத்துவிட்டால், ஆண்டிபாடிகளால் அவை அடையாளம் காணப்பட முடியாத சூழல் உண்டாகலாம். அப்படி நடந்தால், ஒருவரது உடல் ஒரு வைரஸை எதிர்த்து மீண்டும் போராட முடியாமல் மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்